இந்தியாவில் ஹெலிகாப்டர் ஒன்று இன்று (31) காலை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தில் இருந்து கௌச்சருக்கு புறப்பட்ட போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
கிரிஸ்டல் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ஹெலிகாப்டர் லிஞ்சோலி பகுதியில் உள்ள மந்தாகினி ஆற்றுக்கு அருகில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மே 24 அன்று கேதார்நாத்தில் அவசரமாக தரையிறங்கியதில் இருந்து பயன்படுத்தப்படவில்லை என்றும், பழுதுபார்ப்பதற்காக MI-17 விமானத்தின் உதவியுடன் Goucher விமான ஓடுதளத்திற்கு எடுத்துச் செல்லும்போது விபத்து ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
ஹெலிகாப்டரை தாரு முகாம் அருகே இறக்கிவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், ஹெலிகாப்டரில் பயணிகளோ, பொருட்களோ இல்லை என தகவல் கிடைத்ததும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர் அதிகாரி ராகுல் சவுபே தெரிவித்துள்ளார்.