இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் 134 வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட தற்போதைய வாரிசு ஜனாதிபதிக்கு 92 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே இருப்பதாகவும் தனிப்பெரும்பான்மையைக் கூட அரசாங்கம் இழந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இன்று (4) தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் இன்னும் 46 நாட்களில் முடிவடையும் என தெரிவித்த பீரிஸ், வெற்றியை உறுதிப்படுத்தும் கொள்கை அடித்தளத்துடன் அண்மையில் உருவாகியுள்ள மாபெரும் கூட்டணி இம்மாதம் 8ஆம் திகதி உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
நீதித்துறை மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போதைய அரசாங்கம் பாரிய தாக்குதலை முன்னெடுத்து வருவதாகவும், தற்போதைய ஜனாதிபதி நீதித்துறையை செயலிழக்கச் செய்வதாக நீதிபதிகளை பகிரங்கமாக விமர்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sunday, August 4, 2024
ரணிலுக்கு தனிப்பெரும்பான்மை கிடையாது - ஜீ.எல். பீரிஸ்
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »