சகல மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், மாவட்ட பிரதி மற்றும்
உதவி தேர்தல் ஆணையாளர்களும் கொழும்பில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று (3) அழைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இன்று முற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதுடன், இதன்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.