மூன்று கோடி இந்திய முட்டைகள் முதல் தொகுதி இம்மாதம் இறக்குமதி செய்யப்படும் என இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இவ்வருடம் முட்டை இறக்குமதி செய்வது தொடர்பான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
வற் (VAT) உள்ளிட்ட அரசாங்க வரிகளை செலுத்தி முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு அந்த முட்டைகள் லங்கா சதொச ஊடாக பொதுமக்களுக்கு பழையபடி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் சந்தையில் ஒரு முட்டை 50 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருவதால் மீண்டும் முட்டை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.