களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பு கங்காராம விகாரஸ்த செமினாரியில் சந்தித்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவை வழங்குவதாக இன்று (13) அறிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கிடையில் "ராஜிதவின் தீர்மானம்" உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டது.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தீவிரமான தீர்மானங்களை எடுக்கத் தயாராக இருப்பதால், ராஜித சேனாரத்னவும் அவருடன் இணைந்து கொள்ளத் தீர்மானித்ததாகத் தெரிவித்தார்.
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைவாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் நாட்டின் அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இங்கு உரையாற்றிய ராஜித சேனாரத்ன, ரணிலுக்கு இன்னும் ஐந்து வருடங்கள் வழங்கப்படுமாயின் இலங்கையானது உலகில் நவீன நாடாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
நாட்டு மக்களின் நலனுக்காக நாட்டை கட்டியெழுப்ப ரணில் விக்கிரமசிங்கவிற்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக தெரிவித்த ராஜித சேனாரத்ன, எதிர்வரும் செப்டெம்பர் 22 ஆம் திகதி நாட்டின் நிரந்தர ஜனாதிபதியாக ரணில் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை எனவும் தெரிவித்தார்.
மகாசங்கரத்ன, விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஜனாதிபதி செயலகப் பிரதம அதிகாரி சாகல ரத்நாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அனைத்து மத குருமார்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Tuesday, August 13, 2024
நாட்டின் நிரந்தர ஜனாதிபதியாக ரணில் இருப்பார் - ராஜித சேனாரத்ன !
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »