மைக்ரோசாப்ட் நிறுவனம் இளம் இன்டர்ன்கள் (பயிற்சி பெறுபவர்) பில் கேட்ஸ்-ஐ தனிமையில் சந்திப்பதை தடை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய தகவல்கள் நியூயோர்க் டைம்ஸின் செய்தியாளர் எழுதிய புத்தகத்தில்
"நிறுவனத்தின் தலைவர் என்ற போதிலும், இளம் பெண்களிடம் பேசிக் கொண்டே இருப்பது, அவர்களை இரவு உணவுக்கு அழைத்து செல்வது போன்ற செயல்களை செய்ய பில் கேட்ஸ் ஒருபோதும் தவறியதே இல்லை," என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மைமக்ரோசொப்ட் மட்டுமின்றி இதே போக்கு மெலிண்டா கேட்ஸ் பவுன்டேஷனிலும் தொடர்ந்தது என்று கூறப்படுகிறது. பவுன்டேஷனுக்கு வரும் இளம் இன்டர்ன்களிடம் பில் கேட்ஸ் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பதாகவும், இது அவர்களை அசௌகரிய சூழலுக்கு ஆளாக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதில் அளித்த பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர், "இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் மற்றும் அப்பட்டமான பொய்களை உள்ளடக்கியுள்ளது. இவை பெரும்பாலும் கிட்டத்தட்ட இரண்டாம்கட்ட மற்றும் மூன்றாம்கட்ட பெயர் அறியப்படாத ஆதாரங்களையே சார்ந்து இருக்கிறது," என்று தெரிவித்தார்.
Sunday, August 4, 2024
மைக்ரோசொப்டில் பயிற்சி பெறுபவர்கள் பில்கேட்ஸை தனிமையில் சந்திக்கத்தடை...
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »