பணத்திற்கு இரண்டு துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளும் உரிமையை பாராளுமன்ற அமைச்சர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (27) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எம்.பி. பதவியை இழந்த பின்னரும் அவற்றை சொந்தமாக்கிக் கொள்ளும் வகையில் துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.