ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் தமது அங்கீகாரத்தை வழங்கப்போவதில்லை என்று இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைச் சந்தித்துள்ள போதிலும் எந்த வேட்பாளருக்கும் ஆதரவை வெளியிடப்போவதில்லை என்றும் கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
நாங்கள் எவருக்கும் அங்கீகாரத்தை வழங்கமாட்டோம் என்று கொழும்பு பேராயரின் பேச்சாளர் சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.