ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை முடிவெடுக்கும் முக்கிய கூட்டமொன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ் ஸலாமில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மு.க தலைவர் ஹக்கீம் தலைமையில் நடைபெறும் குறித்த கூட்டத்தில் ஜனாஸாக்களை எரித்த கோட்டாவுக்கு 20ம் திருத்தத்திற்கு கை உயர்த்திய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், ஹரீஸ் மற்றும் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அம்பாறையில் மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னரே கல்முனைக்கு ஒரு அமைச்சுப் பதவி கிடைக்கும் எனக் கூறி தனது ஆதரவை ஜனாதிபதி ரனில் பக்கம் தெரிவித்திருந்த நிலையில் இந்த கூட்டத்திலும் ஹரீஸ் அவர்கள் பங்கெடுத்துள்ளதுடன், மு.க எம்.பி க்களுக்கு மிக அண்மையில் பெருந்தொகை பணத்தையும் ஜனாதிபதி ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
இந்நிலையில் கட்சியின் உயர் பீடம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதும், அந்த முடிவுக்கு கட்சி எம்.பி க்கள் கட்டுப்படுவார்களா? என்பதும் மிக முக்கிய கேள்விகளாகும்.