ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டம் ஞாயிற்றுக்கழமை(4) கட்சியின் தலைமையமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது , லுஹர் தொழுகைக்கான அதான் ஒலித்த வேளையில், கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், பிரதிப் பொருளாலர் ஏ.சி.யஹியாகான் எடுத்திருந்த
படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்ததமை ,
விஷமிகளுக்கு கட்சியை அநாகரிகமாக முகநூலில் விமர்சிக்க இடமளித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளினால்
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் ,அவரை கூட்டத்திலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார் .
கட்சியின் தலைவர் ஹக்கீம் உடனடி நடவடிக்கையாக யஹியாகானை நடைப்பெற்று கொண்டிருந்த உயர்பீடக் கூட்டம் மற்றும் அடுத்த உயர்பீடக் கூட்டம் ஆகிய இரு அமர்வுகளிலும்
பங்குபற்றக்கூடாது என இடைநிறுத்துவதாகக் குறிப்பிட்டார்.
கட்சியில் யஹியாகானுடைய வகிபாகம் பற்றி பாராட்டியதோடு , இந்த முடிவை மனவருத்தோடு எடுக்கவேண்டிய நேர்ந்தது பற்றியும் தலைவர் தெரிவித்தார்.
தலைவரின் முடிவுக்குக் கட்டுப்பட்டு, அவருடன் கைகுலுக்கி , முன்மாதிரியான முறையில் யஹியாகான் அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.