Our Feeds


Saturday, August 31, 2024

Zameera

கிளப் வசந்த படுகொலை ; மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல்


 கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடுவலை பதில் நீதவான் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினரை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 29ஆம் திகதி அமல் சில்வா கைது செய்யப்பட்டு பின்னர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »