முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கு உரிய நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.