எனக்கு அமைச்சுப் பதவிகளோ, பெரிய கதிரைகளோ தேவையில்லை. வேண்டுமெனில் ஒரு அமைச்சும் இல்லாமல் அதை விட பலமாக அடுத்த பாராளுமன்றில் இருக்கவும் முடியும். முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை காப்பாற்ற வேண்டும். என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு அட்டாளைச்சேனையில் கட்சி உறுப்பினர்களுடன் நடைபெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார். தோற்றுப் போகும் நிலை வந்தால் ரனில் விக்கிரமசிங்க தேர்தலை நடத்த மாட்டார். அதையும் நாங்கள் ஒரு கை பார்க்கத் தான் இருக்கிறோம் என்றார்.
இருப்பினும், கட்சியின் ஆதரவாளர்கள் கூட்டம் முடிந்த பின் இரு தரப்புக்கு மத்தியில் பாரிய கை கலப்பு ஏற்பட்டது.