‘‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சிக்குள் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்தி பிரிவினை ஏற்படுத்துவதில் கைதேர்ந்தவர் என்றும் அதேவேளை, ஜனாதிபதிக்கும் தமக்கும் இடையில் எவ்வித ஒப்பந்த அரசியலும் இல்லை’’ என்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நேற்று (05) பொதுஜன பெரமுனவின் பிரதான அலுவலகத்தில் இடம்பெற்றது. அந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
கட்சியின் அரசியல் குழுவில் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிடுகிறார்கள். அரசியல் குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஆதரவு வழங்கி விட்டு மக்கள் மத்தியில் பொய் விமர்சனங்களை முன்வைப்பது ஏற்புடையதல்ல.
பொதுஜன பெரமுனவை விட்டுச் சென்றுள்ளவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணைவார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சலூன் கதவு திறந்துள்ளது என்று குறிப்பிடுவார். அதேபோன்று, விலகிச் செல்பவர்களை பலவந்தமாக தடுத்து வைக்க எம்மால் முடியாது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சிகளை பிளவுபடுத்துவதில் திறமையா னவர்.
கொள்கைகளை முன்னிலைப்படுத்தி கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக் காமல், தனிப்பட்ட முறையில் கட்சியின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கட்சிகளை பிளவுபடுத்துவது ஜனாதிபதியின் இயல்பாகும்.
ஜனாதிபதிக்கும் எமக்கும் இடையில் எவ்வித ஒப்பந்த அரசியலும் இல்லை. கட்சியின் கொள்கைக்கமைய, நாங்கள் தீர்மானம் எடுத்தோம். கட்சியின் உறுப்பினர் இல்லாத ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவது சாத்தியமற்றது. எமது ஜனாதிபதி வேட்பாளரை நாளை அறிவிக்க தீர்மானித்துள் ளோம். கட்சியை பாதுகாத்துக் கொள்வதற்காகவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tuesday, August 6, 2024
பிரிவினை ஏற்படுத்த வல்லவர் ரணில் - நாமல் விசனம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »