Our Feeds


Saturday, August 3, 2024

Sri Lanka

அரபிக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!


தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக அரபிக் கடல் பகுதிகளுக்கு கடற்படையினர் மற்றும் மீனவர்களை செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுமெனவும் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »