Our Feeds


Friday, August 9, 2024

Zameera

சீசெல்ஸ்ஸில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்தவர் கைது


 சீசெல்ஸ்ஸில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கூறப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்குச் சொந்தமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்ய இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »