ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய அச்சுப்பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.
இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்ததன் பின்னர் அச்சுப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டுடன் ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இடம்பெறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.