அக்குரணை வெள்ளம் பற்றிய கூட்டத்தை அக்குரணை
பள்ளிவாயலும், உலமா சபையும் பகிஷ்கரித்தது தேவையில்லாத வேலை - மு.க தலைவர் ஹக்கீம்அக்குரணை வெள்ளத்திற்க்கு தீர்வு காண முடியாமைக்கு முழுக் காரணம் அக்குரணை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்தான்.
வெள்ளம் பற்றிய கூட்டத்தை பகிஷ்கரிப்பதாக அக்குரணை பள்ளிவாயல் தேவையில்லாத தீர்மானம் எடுத்தது.
சில பேர் இந்த பழியை எமது தலையில் போட்டு தேங்காய் உடைக்க நினைக்கிறார்கள்.
நான் யாரோடும் விவாதிக்கத் தயார்.
அக்குரனையின் முன்னாள் தவிசாளர் இஸ்திஹார் ஒவ்வொரு பாடசாலைக்கும் 20 லட்சங்கள் வழங்கியுள்ளார். அவற்றை இந்த வெள்ள பிரச்சினைக்கு செலவு செய்திருக்கலாமே?
வெள்ளத்தை விஞ்ஞான பூரவமாகத்தான் தடுக்க முடியும். இதற்க்காக எனது அமைச்சிலிருந்து 60 மில்லியன் செலவு செய்துள்ளேன். இது பற்றி நான் பேசியது 3 பக்கத்தில் எழுத்தில் இருக்கிறது. நான் செய்த முயற்சிகளை புத்தகமாக வெளியிடப் போகிறேன்.