Our Feeds


Tuesday, August 6, 2024

Sri Lanka

சம்பள அதிகரிப்பிற்கு எதிரான மனு வாபஸ்!



21 தோட்ட நிறுவனங்களினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று (06) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ​​அக்கரபத்தனை பெருந்தோட்டக் கம்பனி உட்பட 21 பெருந்தோட்டக் கம்பனிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி  ரொமேஷ் டி சில்வா, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து இந்த மனுவை வாபஸ் பெற அனுமதி கோரினார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை தொழில் அமைச்சர் மீளப் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா நீதிமன்றில் இதற்கு முன்னர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »