ஜனாதிபதி தேர்தலில் எவருக்கும் ஆதரவளிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தன்னை பற்றி ஊடகங்களும் ஏனைய கட்சிகளும் வெளியிட்டு வரும் விடயங்களை அவர் நிராகரித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைபதவி தொடர்பான விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏனையவர்கள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் செல்லுபடியற்றவை என குறிப்பிட்டுள்ளார்.