எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ள எனவும் சுதந்திரக் கட்சியைப் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நிறைவேற்று சபையின் 90 வீதமானோரின் இணக்கப்பாட்டுடன் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளது. அந்த தீர்மானத்தை எமது கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட கட்சியின் அதிகாரிகள் மட்டுமன்றி சு.கவை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுஜன பெரமுனவின் கீழ் பாராளுமன்றத்திற்கு தெரிவான 14 உறுப்பினர்களில் 08 உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, அகில இலங்கை நிறைவேற்று சபையிலுள்ள 90 வீத உடன்பாட்டுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது . எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலமான ஏற்பாட்டு வலையமைப்பு தற்போதே தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளது என்றார்.