Our Feeds


Wednesday, August 7, 2024

Sri Lanka

திசைகாட்டியாலேயே அரசியலை மக்களுக்கு பொறுப்புக்கூறுகின்றதாக மாற்றமுடியும் - அநுர குமார திசாநாயக்க


மேடையில் அமர்ந்துள்ள அனைவரும்  கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சியின் பெறுபேறு கிடைத்தள்ளது. முன்னாள் கடற்படை தளபதி றியர் அட்மிரால் சிறிமெவன் ரணசிங்க இத்தருணத்திற்கு வந்துள்ளமை எமக்கு பாரிய தெம்பினைத் தருகின்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பாக பணியாற்றிய சிரேட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர பெருந்தொகையான குற்றச்செயல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதால் வேட்டையாடலுக்கு இலக்காகினார்.

அவரைப்போன்றே அனைவருக்கும் நீதியை நிலைநாட்டவேண்டியது எமது பொறுப்பாகும். பொதுவாக இராணுவ படையணியொன்றில் 600 - 700 பேர் வரை இருப்பார்கள். இப்படிநோக்கினால் 30 - 40 படையணிகளைச் சேர்ந்தவர்கள் இங்கு இருக்கிறார்கள். எந்தவொரு  சவாலையும் எதிர்கொண்டு வெற்றிபெறக்கூடியவர்கள் இங்கு குழுமியிருக்கிறார்கள். இது சிலவேளைகளில் பிறரின் கோபாவேசத்தை தூண்டுகின்ற மாநாடாக அமையக்கூடும். அண்மையில் உளவுத்துறை சமர்ப்பித்த அறிக்கையின்படி இரண்டு பிரதான விடயங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர் பாரிய ஆர்வத்துடன் தேசிய மக்கள் சக்தியை சுற்றிக் குழுமி வருகின்றமையும் இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்கள் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றிக் குழுமிவருகின்றமையும் காரணமாக தேசிய மக்கள் சக்தி  வெற்றிக்கம்பத்தை நோக்கி வீறுநடை போடுகின்றதென்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எழுந்துவருகின்ற சக்தி எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆந் திகதி மகத்தான  வெற்றிபெறுவதை எவராலும் தடுக்க இயலாது.

75 வருடகால வரலாற்றினை ஒருபுறம் வைத்துவிட்டு கடந்தகால சம்பவங்களை எடுத்துநோக்கினால் கவலைக்கிடமான தன்மையை விளங்கிக்கொள்ள முடியும். இதைவிட அருவருப்பான அரசியல் நிகழ்வுகளை இனிமேலும் காணமுடியுமா?  பிரசன்ன ரணதுங்க கப்பம் பெற்றமை, மஹிந்தானந்த நிதிசார் குற்றச்செயல் புரிந்தமை பற்றிய குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டவேளையில் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமர். ரத்வத்தே சிறைச்சாலைக்குள் அத்துமீறிப் பிரவேசித்து கைத்துப்பாக்கியை கைதிகளின் தலையில் வைத்து அச்சுறுத்தினார் என்பதை அவர்கள் அறிவார்கள்.

மறுபுறத்தில் ஐ.ம.ச. கட்டியெழுப்பபடுகையில் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்ட பீல்ட் மார்ஷல் இப்போது வெளியில்,  மொட்டின் தவிசாளர் ஜீ. எல். பீரிஸ் இப்போது உள்ளே. மஹிந்த ராஜபக்ஷவை அப்பச்சி என அழைத்த எஸ் எம். சந்திரசேனவும் ரோஹித அபேகுணவர்தனவும் இப்போது ரணிலை அப்பச்சி என அழைக்கிறார்கள். எவ்வளவு அருவருப்பான அரசியல்? இது வெட்கமற்ற அரசியல். ரணிலை சிறைக்கு அனுப்பும்வரை நித்திரைகொள்ள மாட்டேன்  எனக்கூறிய மஹிந்தானந்த இப்போது ரணில் மடியில் உறங்குகிறார்.  மத்திய வங்கியை பட்டப்பகலில் பகற்கொள்ளையடித்தவர் ரணில் எனக் கூறிய பந்துல குணவர்தன இப்போது எங்கே இருக்கிறார்'? இந்த அரசியலுக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். 

பிரசைகள் மீது,  தாய்நாடு மீது பொறுப்பற்றவகையில் செயலாற்றுகின்ற   யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அரசியலை தாய்நாட்டுக்குப் பொறுப்புக்கூறுகின்ற தொழிலாக தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே மாற்றியமைக்க முடியும். 


இராணுவத்தின் சிப்பாய்கள் என்றவகையில் நீங்கள் உறுதிப்பிரமாணம்செய்து அரசியலமைப்பினை பாதுகாப்பதற்காக  உயிரைக்கூட அர்ப்பணித்துள்ளீர்கள்.  நாட்டின் சுயாதீனத்தன்மை, தன்னாதிக்கத்தை பாதுகாப்பதற்காக உங்கள் அருகில் இருந்த நண்பன் உயிரிழக்கையில், அங்கங்களை இழந்திருக்கையில் நீங்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய போதிலும் அந்த உறுதிப்பிரமாணத்தை மீறவில்லை.

உங்கள் உடலை சன்னங்கள் ஊடறுத்து, கண்கள் குருடாகி, கைகால்கள் முடமாகி இருக்கின்ற வேளையில் ஆட்சியாளன் அரசியலமைப்பை மீறுகிறான். சந்திரிக்கா தனது ஆட்சிக்காலத்தில் அன்பர்களுக்கு காணி பகிர்ந்தளித்து தவறாளியாகிறார். பொருளாதாரத்தை வீழ்த்தியமை தொடர்பில் உயர் நீதிமன்றம் மஹிந்தவை தவறாளியாக்கியது.  மைத்திரிபால சிறிசேன நிலா வெளிச்சத்தில் அரசியல் சதித்திட்டத்தை தீட்டியமை, பாராளுமன்றத்தை கலைத்தமை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்துக்கொள்ளாமல், றோயல் பார்க் யுவதியை படுகொலை செய்தவரை ஜனாதிபதி தத்துவத்தைக் கொண்டு விடுதலை செய்தமை முதலியவற்றுக்காக உயர்நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக நிலவிய பல வழக்குகளை ஜனாதிபதி விடுப்பாட்டு உரிமையின் கீழ் அகற்றிக்கொண்டார். பொருளாதாரத்தை சீர்குலைத்தமை தொடர்பிலும் அவர் குற்றவாளியாக்கப்பட்டார். அடிப்படை உரிமை மீறல் மனு சமர்ப்பிக்கப்பட்டமை காரணமாக பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோனின் தொழில் இடை நிறுத்தம் செய்யப்படவேண்டுமென உயர் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது. பிரதமர் தினேஷ் குணவர்தன அந்தக் கட்டளைக்கு சவால் விடுத்ததோடு சபாநாயகருடனும் பிரதம நீதியரசருடனும் கலந்து பேசி பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுமாறு ரணில் விக்கிரமசிங்க கூறினார். குற்றச் சாட்டப்பட்டவரும் நீதிமன்ற நீதியரசயொருவரும் கலந்து பேசி வழக்கு தீர்ப்பு அளிப்பது எந்த நாட்டிலே? இன்னமும் உயர்நீதிமன்றம் சபாநாயகருடன் பேச்சுவார்த்தை நடத்தாமை தொடர்பில் நாங்கள் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம்.

வழக்கு தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் ஒரு கையொப்பத்தை இட்டுக்காட்டுமாறு நாங்கள் தேசபந்து தென்னக்கோனுக்கு சவால் விடுக்கிறோம்.  பொலிசுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமைகளை ஈடேற்ற தேசபந்துவே தேவையா? அப்படியானால் நிறுவனங்களின் பயன் என்ன? வேலையைத்தான் செய்ய வேண்டுமானால் அடுத்ததாக இருக்கின்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கலாம்.

ஆனால் ரணிலுக்கு தேவையான வேலைகளை செய்து கொள்ள தேசபந்து தென்னக்கோனே தேவை. பட்டப்பகலிலே நீதிமன்றத்துடன் ஜனாதிபதி மோதுவாரென்றால், பட்டப்பகலில் ஜனாதிபதி சட்டத்தை மீறுவாரென்றால் உங்களின் தொழிலால் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயற்பொறுப்பின் பயன் என்ன? அப்படியானால் சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்படுகின்ற ஒரு நாட்டை உருவாக்குவதில் தடையேற்படுத்துகின்ற ஆட்சிக்குழு விரட்டியடிக்கப்பட வேண்டும். அதற்காக பாராதீனப்படுத்த முடியாத உரிமையும் கடமையும் உங்களுக்கு இருக்கிறதென நான் நம்புகிறேன். 


நீங்கள் எங்களுடைய தாய் நாட்டின் சுயாதீனத்தன்மையையும் தன்னாதிக்கத்தையும் பாதுகாக்க எவ்வளவு தான் அர்ப்பணிப்பு செய்தாலும் பொருளாதார ரீதியாக சீரழிந்த ஒரு நாட்டிலே அதனை சாதிக்க முடியாது. எமது நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்திடமே இருக்கிறது. அரசாங்கமே வரவு செலவுத் திட்டத்தை வகுகின்றது என்பது எமக்கு தெரியும். எமது நாட்டின் வரிகளை தீர்மானிப்பதும் வரவு செலவு ஆவணத்தை தயாரிப்பதும் சர்வதேச நாணய நிதியமாகும்.

பொருளாதாரம் சீரழிந்த ஒரு நாட்டின் சுயாதீனத்தன்மையும் தன்னாதிக்கமும் கானல் நீராகும். கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் ஆண்டொன்றில் 36,000 கப்பல்கள் பயணிக்கின்றன. கொழும்புத்துறைமுகம் உலகில் 24 வது இடத்தை வகிப்பதோடு இந்தியாவின் ஜவஹர்லால் நேரு துறைமுகம் 34 வது இடத்தையே வகிக்கிறது. எங்களுடைய துறைமுகத்தில் ஒரு ஜெட்டியை இந்தியாவுக்குக் கொடுத்தால் அடுத்த ஜெட்டியை சீனாவுக்கு கொடுக்கவேண்டும். நுரைச்சோலை மின்னிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம், புகையிரத வீதிகளை அமைத்தல் போன்ற கருத்திட்டங்களில் இந்தியாவும் சீனாவும் போட்டிபோட்டுக் கொள்கின்றன.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் தேசிய பாதுகாப்பும் சுயாதிபத்தியமும் பாதுகாக்கப்படுகின்ற வேலைத்திட்டமே அமுலாக்கப்படும். எம்மைவிட சிறிய நாடான சிங்கப்பூர் சுயாதிபத்தியத்தை பாதுகாத்துக் கொண்டிருப்பது பொருளாதார ரீதியாக பலமடைந்ததாலேயே ஆகும். அந்த நிலைமைக்கு எமது நாட்டை மாற்றுவது எமது அடிப்படை பொறுப்பாகும். 


நீண்டகாலமாக மக்கள் விடுதலை முன்னணி என்ற வகையில் நாட்டில் நிலவிய உண்மையான பிரச்சினைகள் பற்றி பொருளாதார பிரச்சினைகள் பற்றி மக்களுக்கு விடயங்களை எடுத்துரைப்போம். எனினும் அவர்கள் உருவாக்கிய இனவாத அரசியல் ஏனைய எல்லா விடயங்களையும் மூடிமறைத்து முழு நாட்டினதும் கவனத்தை யுத்தத்தின் பால் வழிப்படுத்தியது. 1948 இல் பெருந்தோட்ட மக்களின் குடியுரிமை நீக்கப்பட்டது. 56 இல் ஒரு பிரச்சினையை உருவாக்கி 1958 இல் ‘ශ්‍රී’ எழுத்தை அழித்தமை, 1965 இல் "டட்லியின் வயிற்றில் மசாலை வடை" எனக்கூறி பேரணி நடத்தியமை, 1972 இல் தமிழ் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டு 1976 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக மாற்றிக் கொண்டு வட்டுக்கோட்டை மாகாநாட்டில் தனி நாடு பிரகடனம் செய்யப்பட்டமை வரை பிரேரணைகள் அங்கீகரித்துக் கொள்ளப்பட்டன.

1977 இல் அந்த பிரேரணைக்கு மக்கள் ஆணையை பெற்றுக்கொள்வதற்காக உதய சூரியன் சின்னத்தில் தோ்தலில் போட்டியிட்டார்கள். ஜே.ஆர். ஜயவர்தனவின் அதிகார வெறியாட்டத்தில் 1981 இல் அபிவிருத்தி சபை தோ்தல் வாக்குகளை கொள்ளையடித்து யாழ் நூலகத்தை தீக்கிறையாக்கினார்கள். யாழ் மக்களின் ஆன்மீக பிணைப்பு நிலவிய நூலகத்தை தீக்கிரைக்காக்கும்போது அவர்களுடைய இதயங்கள் வெடித்துச் சிதறமாட்டாதா? 1983 இல் கறுப்பு ஜுலை உருவாக்கப்பட்டது. 1982 இல் நடத்தப்படவிருந்த பொதுத்தோ்தல் முறைப்படி நடத்தப்பட்டிருந்தால் யாழ் மக்களின் குரல் பாராளுமன்றத்தில் ஒலித்திருக்கும்.

எனினும் ஜே.ஆர் ஜயவர்தன தன்னுடைய 5/6 பெரும்பான்மை அதிகாரத்தை பேணி வர செயலாற்றியதன் காரணமாக வடக்கில் ஆயுத போராட்டத்திற்கு வழிசமைத்து 1983 இல் கறுப்பு ஜுலை காரணமாக  தற்கொலை  குண்டுதாரிகள் உருவாகுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார். 1999 ஜனாதிபதி தோ்தலில் டவுன் ஹோல் குண்டு வெடிப்பு காரணமாகவே சந்திரிக்கா ஜனாதிபதியாகிறார். 2005 இல் ஜனாதிபதி தோ்தலில் யுத்தமே முக்கிய இடம் வகித்தது. 2010 ஜனாதிபதி தோ்தலில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த கௌரவத்திற்காக இரண்டாவது தடவையாகவும் மஹிந்த ஜனாதிபதியாக்கப்படுகிறார்.

சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக வருவதும் யுத்தத்திற்கு தலைமைத்துவம் வழங்கியதாலேயே. 2019 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின் உருவாக்கிய குண்டுப்பீதி காரணமாகவே கோட்டாபய ஜனாதிபதியாகிறார். அவர்கள் யுத்தத்தை உருவாக்கி நீண்ட காலமாக அவர்களின் இருப்பினை உறுதி செய்து கொண்டாலும் இப்போது ரணிலும் மஹிந்தவும் யுத்தம் இல்லாமல் போனதால் சோர்வடைந்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு மதப்பூசலை ஏற்படுத்துவதற்காக வடக்கிலும் தெற்கிலும் முயற்சி செய்து வருகிறார்கள் என்பது எமக்கு தெரியும்.

அதனாலேயே அவர்களுக்கு தேசபந்து வேண்டும். அவர்கள் ஒருபோதுமே யுத்தத்தில் பாதிப்படைந்தவர்களாக மாறாமல் தமது அரசியலுக்காக அதனை பயன்படுத்தி வந்தார்கள்.

யோஷித்த ராஜபக்ஷவை கடற்படையில் சோ்த்துக் கொள்வதற்காக அதுவரை ஆட்சோ்ப்புக்கு இருந்த குறைந்த பட்ச தகைமையை குறைத்தார்கள். அத்துடன் நின்று விடாமல் பெரிய பிரித்தானியாவில் ஒரு பாடநெறிக்காக ஒருகோடியே எண்பது இலட்சம் ரூபா பொதுப்பணத்தை செலவிட்டார்கள். அதன் பின்னர் யுக்கிரேனுக்கு ஒரு பாடநெறிக்காக அனுப்பி 36 இலட்சம் ரூபாவுக்கு கிட்டிய பொதுப் பணத்தை செலவிட்டார்கள்.

அதன் பின்னர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுடன் இணைத்து 27 தடவைகள் வெளிநாடு செல்வதற்காக வாய்ப்பளித்தார்கள். இந்த நாட்டில் சாதாரண பெற்றோர்களின் பிள்ளைகள் யுத்தத்திற்கு பலியாகின்ற வேளையில் அவர்களின் பிள்ளைகள் யுத்தத்தின் பயனாளிகளாக மாறினார்கள். வடக்கிலுள்ள தாய் தந்தையர்களும் தமது பிள்ளைகள் தொடர்பில் இன்னமும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இராணுவ சேவையில் இணைந்து ஒழுக்கத்தையும் அறிவையும் வளர்த்துக் கொண்டு ஏனைய தொழில்களை விட முன்கூட்டியே இளைப்பாறுவதற்கான வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.

அவர்களின் உழைப்பு வளம் வீணாகிச் செல்ல இடமளிக்காமல் குறிப்பாக தனியார் பாதுகாப்புச் சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்கான திட்டங்களை வகுப்போம். பாதுகாப்பு படைகளின் ஆட்சோ்ப்பு, பதவியுயர்வு மற்றும் இடமாற்றம் முறையான நடைமுறைமுக்கு இணங்க மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்போம். எதிரிகள் அவர்களுடைய பிரச்சாரத் திட்டங்களை எம்மைப்பற்றிய ஒரு அச்ச உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது தொடர்பிலேயே கவனம் செலுத்தி வகுத்து வருகிறார்கள்.

சமுர்த்தி நலன்பெறுநர்களை சந்திக்க சென்ற தேசிய மக்கள் சக்தி வந்தால் மானியங்களை வெட்டிவிடுமென அச்சுறுத்தி வருகிறார்கள். பாதுகாக்கப்பட வேண்டிய மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தேசிய மக்கள் சக்தியின் முதன்மைச் செயற்பொறுப்பாகும்.

இன்றளவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமாக பாய்ந்து வர இடமளிக்காத பகைவர்கள் தனியார் முதலீட்டார்ளர்கள் சம்பந்தமாக பல்வேறு அவதூறுகளை கூறிக்கொண்டு பொய்ப்பிரச்சாரங்களை நடாத்தி வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலானதாகக் கூறிக்கொள்கின்ற ஊடகம் சஜித்தின் மறைவில் இருந்து கொண்டு மேற்கொண்டு வருகின்ற பிரச்சாரங்களை நாங்கள் அறிவோம்.

கறுப்புப்பணம் எல்லாவற்றையும் எமக்கெதிராக இந்த தோ்தலின் போது பயன்படுத்துகிறார்கள். சட்டவிரோதமான அனைத்துச் செயற்பாடுகளையும் உயர்ந்த அளவில் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்ற தோ்தலே இது. அந்த அனைத்திற்குமே முகம் கொடுக்கக்கூடிய பாரிய மக்கள் படையணி எம்மைச்சுற்றி இருக்கிறது. எதிரியின் முன்னால் தப்பியோடிச் செல்லாத, எதிரியின் முன்னால் மண்டியிடாத, சிரமங்களை பொருட்படுத்தாமல் வெற்றியை நோக்கி வீறுநடை போட்ட உங்களின் துணிச்சலையும் நம்பிக்கையையும் இந்த சின்னஞ்சிறிய மாயாஜால வித்தைகளால் சிதைத்துவிட முடியாது. ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ஷ, சஜித் பிரேமதாஸ கறுப்பு பணத்தையும் ஊடகப்பலத்தையும் பிரயோகிப்பார்களானால் அவை அனைத்தையும் எஞ்சிச் செல்லக்கூடிய இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவினைச் சோ்ந்தவர்கள் தேசிய மக்கள் சக்தியை சூழ்ந்திருக்கிறார்கள்.

தமக்கு கிடைக்கின்ற சொச்சத் தொகை ஓய்வூதியத்தை செலவிட்டு ஒரு திட்டவட்டமான நோக்கத்திற்காகவே இங்கு வந்திருக்கிறீர்கள். இந்த விதமான கோபமூட்டல்களுக்கு அகப்படாமல், உச்ச அளவிலான சனநாயகத்துடன், உச்ச அளவிலான அமைதியுடன், எந்தவிதமான விஷமத்தனமான செயலுக்கும் அகப்படாமல், பொறுப்புடையவர்களாக தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக அர்ப்பணிப்பு செய்யவேண்டியது அவசியமாகும். இங்கு வருகை தந்துள்ள அனைவரும் ஊர்களுக்குச் சென்று எழுப்புகின்ற குரலை பொய் பிரச்சாரம் செய்கின்ற தொலைக்காட்சி அலைவரிசைகளால் மழுங்கடிக்க செய்ய முடியாது.

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக உச்ச நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றுகின்ற குழுவினரே இங்கு குழுமியிருக்கிறார்கள். உணவு வேளையொன்று இல்லாத, கூரைவேய தகடு இல்லாத, சீமெந்து மூடையொன்றை வாங்க முடியாத அப்பாவி மக்களை பகைவனின் சூழ்ச்சிகள் மூலமாக ஏமாற்றுவதற்கு மீண்டும் மீண்டும் முயற்சி செய்வார்கள். ஏமாறுவதிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக திடசங்கற்பத்துடன் பலம் பொருந்திய வகையில் உங்கள் செயற்பொறுப்பினை நீங்கள் ஆற்றுங்கள்.

நீங்கள் இராணுவத்தில் ஈடேற்றியதும் யுத்தத்தில் ஈடேற்றியதும் அத்தகைய செயற்பொறுப்பினையே. இப்போது எஞ்சியருப்பது தோ்தலின் செயற்பொறுப்பாகும். அதனை நீங்கள் முழுமையாக ஈடேற்றுவது திண்ணமே.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »