தேர்தல் ஆணையகத்தின் கூற்றுப்படி, முழுமையான அல்லது பகுதியளவு பார்வைக் குறைபாடுள்ள அல்லது அங்கவீனமுற்ற வாக்காளர் ஒருவர் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிக்கு உதவியாளர் ஒருவருடன் வரலாம் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனை அறிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உடன் வரும் உதவியாளர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்பதுடன், தேர்தலில் போட்டியிடாதவராகவும் இந்தத் தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரினதும் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாகவோ பிராந்திய பிரதிநிதியாகவோ அல்லது வாக்குச்சாவடி பிரதிநிதியாகவோ அவர் செயற்படக்கூடாது.
ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான சட்டத்தின் ஐந்தாவது பகுதியில் உடல் தகுதிச் சான்றிதழை வாக்காளர் ஒருவர் உதவியாளருடன் வருவதற்கு வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்படி உடற்தகுதிச் சான்றிதழைப் பெறுவதற்குத் தேவையான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட தேர்தல் அலுவலகம், கிராம அலுவலர் அலுவலகம் அல்லது www.elections.gov.lk இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு பெறப்படும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கிராம அலுவலரிடம் சமர்ப்பித்து, பின்னர் சான்றிதழுக்காக அரச மருத்துவ அலுவலரிடம் சமர்ப்பித்து உடற் தகுதிச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
வாக்களிக்கச் செல்லும்போது வாக்காளர் மற்றும் உதவியாளர் இருவரும் தேசிய அடையாள அட்டை அல்லது வாக்குச்சாவடியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டையை எடுத்துச் செல்வது அவசியம்.