சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியோனிங்கில் (Liaoning) உள்ள கிராமப்பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக அங்கு வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இதில் 300க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிக்கும் நிலையில், அங்கு தொடர்பாடல்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிகள் வழங்க மாகாணம் முழுவதும் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.