இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணியின் பிரபல பந்து வீச்சாளர் மதீச பத்திரன மற்றும் டில்சான் மதுசங்க ஆகியோர் விலகியுள்ளனர்.
உபாதை காரணமாக அவர்கள் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களுக்கு பதிலாக மொஹமட் ஷிராஸ் மற்றும் எஷான் மலிங்கா ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
மேலும் குசல் ஜனித், பிரமோத் மதுஷான் மற்றும் ஜெஃப்ரி வென்டேசே ஆகியோரை இலங்கை ஒருநாள் அணியில் இணைத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை (02) கொழும்பு கெத்தாராம கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Thursday, August 1, 2024
மேலும் இரு வீரர்களுக்கும் உபாதை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »