ஊழலுக்கு எதிரான புதிய சட்டங்களை இயற்றுவது தொடர்பான விடயங்களை ஆராய குழுவொன்றை நியமிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் விழாவில் அவர் பேசுகையில், சபாநாயகர், தொழில்முறை சங்கம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) மற்றும் வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை இந்தக் குழு உள்ளடக்கியிருக்கும் எனத் தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிரான சில சட்டங்கள் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில சட்டங்கள் இயற்றப்பட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், திருடர்களை பிடிக்க வேண்டும் என அனைவரும் பேசுகின்றனர், அதை எப்படி செய்யப் போகிறார்கள்? திருடர்களைப் பிடிக்க நாங்கள் சட்டம் கொண்டு வருகிறோம், வெறுமனே பேசுவது எளிது, என ஜனாதிபதி மேலும் கூறினார்.