Our Feeds


Thursday, August 1, 2024

Sri Lanka

எரிபொருள் விநியோகம் தடையின்றி தொடரும் - காஞ்சன விஜேசேகர!


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாடளாவிய ரீதியில் தடையின்றி எரிபொருள் விநியோகத்தை தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட காஞ்சன, அனைத்துப் பொருட்களின் கையிருப்பையும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பராமரிப்பதால், தடைகளற்ற எரிபொருள் விநியோகம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், வருடாந்த பராமரிப்பு மற்றும் சேவைக்கு உட்பட்ட சுத்திகரிப்பு நிலையம் ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் அதன் செயல்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த 6 மாதங்களுக்கான எரிபொருள் சரக்கு திட்டம், இருப்பு சேமிப்பு திறன், விநியோகத் திட்டம் மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நிர்வாகத்துடன் நேற்றைய தினம் ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் புதுப்பிப்பை வழங்கினார்.

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம்(IOC), சீன பெட்ரோலியம், கெமிக்கல் கோர்ப்பரேஷன் (சினோபெக்) மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட RM Parks Inc. ஆகியவற்றின் பங்குகள் மற்றும் சரக்கு திட்டங்களும் மதிப்பாய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »