ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் இளங்கலை சட்ட மாணவர்கள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (7) நடைபெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தின் பிரகாரம் ஜனாதிபதிச் செயலகம், ஜனாதிபதி மாளிகை, துறைமுக நகரம், மத்திய வங்கி மட்டும் பாராளுமன்றம் உள்ளிட்ட கொழும்பை சுற்றியுள்ள கல்வி பெறுமதி வாய்ந்த விசேட இடங்களை பார்வையிடும் வாய்ப்பு பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் இளங்கலை சட்டப் பட்டதாரிகளான சுமார் 280 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
அவர்களின் கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி, மாணவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள சட்டவாக்க, நிறைவேற்று மற்றும் நீதித்துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் அவர்களுக்குத் தெரிவித்தார்.