மதச் சார்பற்றவர்களுக்கு இடமளியோம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு.
புத்தசாசன அமைச்சின் ஊடாக கிராமங்களிலும் சந்திகளிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளை கணக்கெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றே இது நடந்து வருகிறது.
இதே கணக்கடுப்பு ஏனைய இனங்களுக்கும் வரலாம். ஏனைய இனங்களில் மதஸ்தானங்களை கணக்கெடுக்கும் நிலை ஏற்படலாம். மதசார்பற்ற சமுதாயம் ஒன்றை உருவாக்கவே முயற்சிக்கின்றார்கள். இன்று பௌத்த தர்மத்திற்கே இவ்வாறான ஆணைகளை பிறப்பிக்கின்றனர். நாளை ஏனைய மதங்களுக்கு அழுத்தங்களை கொடுக்கலாம். மக்களின் மத உரிமையை இல்லாமல் செய்கின்ற முயற்சி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அத்தோடு, தனது தந்தை புத்த சாசன அமைச்சையும் ஏனைய மதங்களுக்கான தனித் தனி அமைச்சுக்களையும் உருவாக்கினார். இன்று தற்போதைய அரசாங்கமும் ஆட்சி அதிகாரத்தை பெற முற்படுகின்ற மதசார்பற்றவர்கள் மதங்களைப் பின்பற்றும் உரிமையை இல்லாத செய்ய முற்படுகின்றனர். இந்த வெட்கங்கெட்ட செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவிப்பதாக தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கு உரிமை உண்டு. இந்த கணக்கெடுப்பை மேற்கொண்டு மதச்சார்ப்பற்ற நிலையை தோற்றுவிக்க நடவடிக்கை எடுத்து வரும் அரச அதிகாரிகளுக்கு எதிராக எமது ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்