தமக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசகரின் கூற்றுக்களை மறுத்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அந்தக் கூற்று முற்றிலும் பொய்யானது என்றும் அவ்வாறான சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை என்றும் அவரைச் சந்திக்க எனக்கு எந்த காரணமும் இல்லை என்றும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க இது தொடர்பில் தெரிவித்தள்ள கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில், நாமல் தனது X கணக்கில் இதனைத் தெரிவித்துள்ளார்.