Our Feeds


Saturday, August 10, 2024

Sri Lanka

ஹரீன் இழந்த எம்.பி பதவியை அமீர் அலிக்கு தருமாறு கேட்க்கும் ரிஷாத் பதியுத்தீன்.



ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்ட ஹரீன், மனுஷ ஆகியோரின் எம்.பி பதவிகள் பறிபோன நிலையில் குறித்த எம்.பி பதவிகளுக்கான போட்டி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.


இரண்டு பதவிகளில் ஒன்றுக்கான நபரை சஜித் முடிவெடுத்து விட்ட நிலையில், மற்றைய எம்.பி பதவிக்காக முன்னாள் எம்.பி ஹிருனிகாவை நியமிக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அவரை குறித்த பதவிக்கு நியமிக்க வேண்டாம் என ஒரு முக்கிய ஊடக நிறுவனம் சஜித்துக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில் குறித்த ஒரு எம்.பி பதவியை பெற்றுக்கொள்ள முஸ்லிம் காங்கிரஸ் மற்றம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவையும் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி சஜித்துக்குத் தான் ஆதரவு என ஏற்க்கனவே முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்து விட்ட நிலையில் ரிஷாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிஸ் தமது ஆதரவு யாருக்கு என இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. 


இந்நிலையில், அஇகம வின் தவிசாளராக இருக்கும் அமீர் அலிக்கு குறித்த எம்.பி பதவியை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் அஇமக முயற்சித்து வருகிறது என்பதே இப்போது சூடான செய்தியாகியுள்ளது.


கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் தமக்கு தருவதாக வாக்களித்த தேசிய பட்டியல் எம்.பி பதவியை தரவேண்டும் என்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்த நிலையில் அப்போதைய எம்.பி அஸ்வர் ஹாஜியார் அவர்கள் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்திருந்தார். அந்த பதவி அப்போதும் அமீர் அலிக்கு வழங்கப்பட்டது. பின்னர் ரிஷாதின் அஇமக மைத்திரியை ஆதரிப்பதாக அறிவித்தமை குறிப்பிடத் தக்கதாகும்.


இந்நிலையில், இது முனாபிக் - நயவஞ்சகத் தனம் என மஹிந்தவே அரபு வார்த்தைகளுடன் பேசித் திரிந்ததும் மக்கள் மறந்த விவகாரமல்ல. 


எனவே தான் இப்போதுள்ள எம்.பி பதவியையும் அதே அமீர் அலிக்கு பெற்றுக்கொள்ள அஇமக முயற்சிக்கும் போது அதே சந்தேகம் எழுவதாக பேசப்படுகிறது.


பொறுத்திருந்து பார்ப்போம். சஜித் என்ன முடிவெடுக்கிறார் என்பதை.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »