இருளை இறந்தகாலத்திடம் ஒப்படைத்துவிட்டு எமது நாட்டுக்கு வளமான விடியலை உருவாக்கிட முடியும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் (வலதுகுறைந்த ஆட்கள்) பற்றிய தேசிய மக்கள் சக்தியின் தேசிய கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் வெளியிடுதல் - கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரி சனிக்கிழமை (03) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கண்கள் தெரிகின்ற , காதுகள் கேட்கின்ற, சரியான அசைவுகளைக் கொண்டுள்ளவர்கள்தான் நீண்டகாலமாக எங்கள் நாட்டை ஆட்சிசெய்தார்கள். அதன் பாதகவிளைவுகள் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆரத்தழுவி உள்ளன. உங்களைப் பார்க்கும்போது, உங்களின் பேச்சுகளை செவிமடுக்கும்போது, உங்கள் திறமைகள் வெளிப்படுத்தப்படுகையில் நாங்கள் ஏன் இவ்வளவு தாமதித்திருக்கிறோம் என்ற உணர்வு எமக்கு ஏற்படுகின்றது. இந்த இருளை இறந்தகாலத்திடம் ஒப்படைத்துவிட்டு எமது நாட்டுக்கு வளமான விடியலை உருவாக்கிட முடியுமென்ற நம்பிக்கை எம்மிடம் நிலவுகின்றது என்றார்..
இன்று எம்மனைவரதும் கண்கள் அகலத்திறந்துவிட்டன என நினைக்கிறோம். எம்மனைவருக்காகவும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்வோமென அழைப்பு விடுக்கிறோம். நாம் எதிர்நோக்குகின்ற சிக்கல்களை கடவுளின் விருப்பம் அல்லது பூர்வஜென்மபலன் என நினைத்து மனதை தேற்றிக்கொண்டோம் என்றார்.
உலகம் முன்நோக்கி நகர்ந்து கைத்தொழில் புரட்சி இடம்பெறுகையில் அந்த கைத்தொழில் புரட்சியால் உறிஞ்சிக்கொள்ள முடியாமல் போன பிரிவினரை வலதுகுறைந்த ஆட்கள் என அழைத்தோம். அவர்களை தனிமைப்படுத்தினோம். எனினும் சமூகத்தின் மற்றுமொரு படிமுறையில் அவர்களை கவனித்துக்கொள்வது இரக்கசிந்தை அல்லது புண்ணிய கருமம் எனவும் பிறர்மீது பரிவிரக்கம் காட்டுதல் போன்ற உணர்விற்கு கட்டுப்படுத்தி நலனோம்பலை வழங்கினோம். எனினும் ஐக்கிய நாடுகள் அங்கீகரித்தக்கொண்ட பிரேரணைக்கிணங்க இந்த மக்களின் உரிமைகள் என்றவகையிலான அடிப்படை விடயங்கள் அறிமுகஞ்செய்யப்பட்டு நீண்ட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. ஒருசில அரசுகள் இந்த சமுதாயத்திற்கு சமத்துவமான உரிமைகளை வழங்கியுள்ளன.
பொலிஸில்சென்று ஒருவரிடம் கேள்விகேட்கும்போது "ஊமைபோல் இருக்காமல் பேசு" எனக் கூறுவார்கள். அந்த இடத்தில் இருப்பது பேசாதித்தல் பற்றிய பிரச்சினையல்ல. அவமதிப்பிற்கு உள்ளாக்குதலும் அச்சுறுத்தலுமாகும். மற்றுமொரு சந்தர்ப்பத்தில் "செவிடன்போல் இருக்கவேண்டாம்" என்பார்கள். மற்றவரை நோகடித்திட, பிறரை அவமதிக்க மற்றவர்களின் உறுப்புகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நாமனைவரும் தவப்புதல்வர்களல்ல. ஒருசில பண்புகளால் ஒருசில பரிபூரணமின்மை நிலவுகின்றது. நீங்களும் மற்றவர்களைப்போல் சமத்துவமான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான கொள்கைகளை வகுப்பதும் அமுலாக்குவதுமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கியமான குறிக்கோளாகும் என்றார்.