கடந்த வாரம் இஸ்ரேலின் அழைப்பை ஏற்று இந்தியா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான ஃபீல்ட் மார்ஷல் திரு. சரத் பொன்சேகா இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதுவராலயத்தினால் கௌரவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகிய நிலையில்,
இதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதரகத்தின் முதன்மை செயலாளரும் அரசியல் ஆலோசகருமான திருமதி ஹடாஸுடன் சரத் பொன்சேகா இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது .
ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகா போட்டியிடும் நிலையில் அவரோடு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் எந்தவித உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை.
“இஸ்ரேல் ஒரு தீவிரவாத நாடு” என கடந்த சில நாட்களுக்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பகிரங்க அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பிரிந்து சென்ற சரத் பொன்சேகாவை இஸ்ரேல் கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.