தரமற்ற மருந்துக்களை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில்
தொடர்புடைய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் 4 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை குறித்த சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று (29) உத்தரவிட்டுள்ளது.