இலங்கை மின்சார சபையில் உள்ளக மறுசீரமைப்பு அவசியம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மின்சாரத்துறை தொடர்பில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மின்சாரத்துறையில் பல்வேறுபட்ட குறைபாடுகள் நிலவுகின்றன. அதனை நிவர்த்திக்க வேண்டுமாயின் உள்ளக மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதன்மூலம் இலாபம் ஈட்டும் நிறுவனமாக இலங்கை மின்சார சபையை மாற்ற முடியும் என்றார்.