இலங்கையில் 100 பாடசாலைகளில் மாணவர்களுக்கு AI தொடர்பான கல்வி முறைமைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவுடனான மாணவச் சமூகம்’ முன்னோடி கருத்திட்டமாக செயற்படுத்துவதற்கும் குறித்த கருத்திட்டத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஆண்டுகளில் இவ்வேலைத்திட்டத்தை ஏனைய பாடசாலைகளில் விரிவாக்கம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் ஆரம்பப் படிமுறையாக தெரிவுசெய்யப்பட்ட 100 பாடசாலைகளில் 6ஆம் தரம் 9ஆம் தரம் வரைக்கும் கல்விபயிலும் மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.