உள்ளூராட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்
என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரே அது சாத்தியமாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பையடுத்து உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் ஏனைய ஆணையாளர்களுடன் இணைந்து எதிர்வரும் புதன் கிழமை (28) கலந்துரையாடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலையும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியம் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.