மாவட்ட மட்ட தலைமை பதவிகளுக்கு தற்காலிக நியமனங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
அநுராதபுர மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கம்பஹா மாவட்ட தலைவராக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த நியமிக்கப்பட்டுள்ளார். காலி மாவட்ட தலைவராக இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். மாத்தறை மாவட்டத்தின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நிபுன ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது சொந்த வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை நிராகரித்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க முன்னைய மாவட்ட தலைவர்கள் எடுத்த தீர்மானத்தை தொடர்ந்து இந்த மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.