கெகிராவ பிரதேச கிரிக்கெட் கவுன்சிலால் மூன்றாவது முறையாகவும், நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் தொடரில் கெகிராவ ஒரியன்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.
மொத்தம் 21 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்றது. அதில் நேகம நியு ஸ்டார் அணியை எதிர்கொண்ட ஒரியன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
தொடரின் நாயகன் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரர் விருதை ஒரியன்ஸ் அணியின் சமன் வென்றார்.
சிறந்த பந்துவீச்சாளராக நேகம நியு ஸ்டார் அணியின் வீரர் ஏ.ஏ. அமீன் தெரிவானார்.
Wednesday, August 14, 2024
சம்பியன் கின்னத்தை வென்றது ஒரியன்ஸ் அணி!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »