Our Feeds


Thursday, August 22, 2024

Sri Lanka

பழமை வாதத்தை விட்டு நவீன சிந்தனையுடன் செயற்படுவோம் -சஜித்!


வழக்கமான கட்டத்துக்குள் இருந்து கொண்டு காலாவதியான பழமைவாத சிந்தனைகளுக்குள் இல்லாமல் நவீன முறையில் சிந்திக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாம் ஒரு பன்முகப்படுத்தப்பட்ட சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளோம்.

கடன், தொழில்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, நாட்டின் பொருளாதாரம், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறை என ஒவ்வொரு துறையும் பாதிப்படைந்துள்ளன.

குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் தாய்மார்களின் உரிமைகள் மீறப்படுகின்றன.

52 சதவீதமாக உள்ள பெண்கள் வீடுகளிலும் வீதிகளிலும் வேலைத்தளங்களிலும் அழுத்தங்களுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளாகியுள்ளனர்.

இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை அதிகரித்துள்ளது.

இந்தப் பிரச்சினைகளுக்கு வழமை போன்று தீர்வு காண முடியாது.

வழமையான சிந்தனைப் போக்கிலிருந்து வெளியேறி ஆக்கபூர்வமாக சிந்தித்து, தரவுகளையும் சாட்சிகளையும் மையப்படுத்திய கொள்கை திட்டங்களைத் தயாரித்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »