இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனியில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனி மற்றும் நிறங்கள் சேர்க்கப்பட்டு சிவப்பு சீனியாக பதப்படுத்தப்படும் இடம், நுகர்வோர் அதிகாரசபையின் இரத்தினபுரி மாவட்ட அலுவலக அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இதனைக் கண்டுபிடித்துள்ளதாக அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அசேல பண்டார தெரிவித்தார்.
நீண்ட காலமாக, இந்த வெள்ளை சீனி சிவப்பு சீனியாக மாற்றப்படுவதாக நுகர்வோர் அதிகார சபை சந்தேகிக்கிறது.
சீனியின் பழுப்பு நிறத்தை அதிகரிக்க வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை நுகர்வோர் அதிகாரிகளால் கைப்பற்றபட்டுள்ளதாகவும் களஞ்சியசாலை அடங்கிய கட்டிடத்திற்கு சீல் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றன.
இந்த மோசடி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக நுகர்வோர் விவகார ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.