ராஜகிரிய பிரதேசத்தில் துப்பாக்கிகளுடன் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட போது, அவர்களிடம் இருந்து T56 ரக துப்பாக்கி ஒன்றும், மைக்ரோ ரக துப்பாக்கி ஒன்றும், T56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 300வும், 9mm, 50 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.