கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
களனி, வத்தளை, பியகம ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பேலியகொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.