ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தின் நடவடிக்கைகள் கட்சிக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜேசேகர, ஜனாதிபதித் தேர்தலில் SLPP தனது சொந்த வேட்பாளரை நிறுத்துவது கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து அல்ல கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானம், கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் எமக்கு முன்னைய சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்ட தீர்மானம் அல்ல.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ள தீர்மானம் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் பிரேரணையாகும். கட்சித் தலைவருடன் கூட பேசாமல் இப்போது முடிவுகள் எடுக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது,'' என்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் கட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் செயற்படுகின்றாரா அல்லது உதயங்க வீரதுங்க தலைமையிலான குழுவினால் செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் விஜேசேகர, சாகர காரியவசத்தை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Friday, August 2, 2024
சாகர காரியவசத்தை பதவியிலிருந்து நீக்க வேண்டும் - காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »