Our Feeds


Friday, August 2, 2024

Sri Lanka

தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு!


யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ்  தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் 266 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »