எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் தற்போதைய சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களினதும் கூட்டம் இன்று (01) நடைபெறவுள்ளது.
இதற்காக ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ள இந்த விசேட சந்திப்பின்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது. இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி உட்பட்ட ஐக்கிய மக்கள் கூட்டணியை எதிர்வரும் 08ஆம் திகதி கொழும்பில் அறிவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது புதிய கூட்டணியின் வேலைத்திட்டங்கள் மற்றும் கொள்கை குறித்தும் விளக்கமளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Thursday, August 1, 2024
ஐக்கிய மக்கள் சக்தி இன்று முக்கிய பேச்சு..
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »