பாரிஸில்இடம்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் நேற்று (2) இடம்பெற்ற மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தருஷி கருணாரத்ன 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அவர் இப்போட்டியை 2 நிமிடங்களும் 7 செக்கன்களிலும் நிறைவு செய்துள்ளாரென தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் தருஷி கருணாரத்னவுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதையடுத்து இன்று (3) இடம்பெறவுள்ள மற்றுமொரு போட்டியில் அவர் பங்கேற்கவுள்ளார்.