Our Feeds


Friday, August 2, 2024

Zameera

நாட்டின் 67% மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை


 நாட்டின் சனத்தொகையில் ஏறக்குறைய 67 சதவீத மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

குடிநீரின் தரம் குறித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு மற்றும் யுனிசெப் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்கும் போதே பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள மேற்கண்ட விடயங்களை தெரிவித்தார்.

நாட்டின் 25 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற, கிராமப்புற மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளை உள்ளடக்கிய 3,210 வீடுகளின் மாதிரிகளைப் பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »