ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி வரை) 631 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 346 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 261 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஒரு முறைப்பாடும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 23 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
Monday, August 19, 2024
தேர்தல் தொடர்பில் இதுவரை 631 முறைப்பாடுகள் பதிவு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »