2000 ஆண்டு முதல் 2009 வரையில் தங்கள் உறவுகள் காணாமல்போனதாக 6047 பேர்மாத்திரமே முறைப்பாடு செய்துள்ளனர் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வடக்குகிழக்கில் மக்கள் நீதிக்காக காத்திருக்கின்றனர் ஒருஇலட்சம் பேர் வரை- அவர்கள் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டமை குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என ஜேர்மனியின் டிடபில்யூவின் செய்தியாளரின் கேள்விக்கு சீற்றத்துடன் பதிலளித்துள்ள அலி சப்ரிஉங்களிற்கு எவ்வாறு இந்த எண்ணி;க்கை கிடைத்தது. யார் இதனை சொன்னது?
இது வெறும் குப்பைமேற்குலகின் முட்டாள்தனம்.என தெரிவித்துள்ளார்.
கேள்வி?
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்றதுயுத்த குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் தேவை காணப்படுகின்றது – அது குறித்த பரிந்துரைகள் உள்ளன
உண்மை நல்லிணக்க ஆணைக்குழு குறித்து பேசப்படுகின்றது ஆனால் இலங்கை எப்போதும் அதனை நிராகரித்துள்ளது ஏன்? தமிழ் சமூகத்தினருக்கு அர்த்தபூர்வமான நீதியை வழங்குவது எந்த நிலையில் உள்ளது?
அலிசப்ரி
நாங்கள் தமிழ் சமூகத்துடன் போர்புரியவில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும்நாங்கள் உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக போராடினோம்
இந்த அமைப்பு இரண்டு தலைவர்களை அழித்தது- ராஜீவ்காந்தி . இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச.பல அமைச்சர்கள்இதமிழ் தலைவர்கள்.
இந்த அமைப்பு தற்கொலை குண்டு தாக்குதலில் ஈடுபட்டது300க்கும் மேற்பட்ட தற்கொலை குண்டுதாக்குதல்களில் ஈடுபட்டதுகடந்த காலங்களில் எவரும் இவ்வாறு செயற்பட்டதில்லை. செய்தது இல்லை.
அவர்கள் 11. 12 வயது சிறுவர்களை பிடித்து இழுத்துச்செல்வார்கள்இஅவர்களிற்கு சையனைட் வில்லையை வழங்கி தற்கொலை தாக்குதலில் ஈடுபடுத்துவார்கள்.
ஆகவே நா ங்கள் அவர்களிற்கு எதிராக போரிடவேண்டும், அவர்களின் செய்கைகளை அனுமதிக்க முடியாது.
சில மேற்குலக நாடுகள் வேறு நாடுகளிற்கு சென்று போரிடுகின்றன,இது எங்களின் ஆட்புல ஒருமைப்பாடு நாங்கள் அதனை செய்யவேண்டும்.
ஆனால் அதன் பின்னர் நாங்கள் சமாதானத்தை ஏற்படுத்தியுள்ளோம்,சரணடைந்த 12000க்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகளிற்கு புனர்வாழ்வளித்துள்ளோம்..
அவர்கள் எங்கள் சமூகத்தின் ஒரு பகுதியினர்.
நாங்கள் போரிட்டவேளை இராணுவத்திடமிருந்த நிலங்களில் 99 வீதத்தினை நாங்கள் உரியவர்களிடம் - மக்களிடம் கொடுத்துள்ளோம்.
ஆகவே நிறைய விடயங்கள் இடம்பெறுகின்றன.
மேற்குலகில் வாக்குவங்கி அரசியல் என சொல்லப்படும் ஒன்று உள்ளது
புலம்பெயர் தமிழர்களில் சிலர் அவர்களின் வாக்குகள் முக்கியமானதாக விளங்கும் பகுதிகளில் சென்று குடியேறியுள்ளனர்.
ஆகவே அந்த நாடுகளின் இலங்கை தொடர்பான கொள்கை முற்று முழுதாக இந்த புலம்பெயர் தமிழர்களால் தீர்மானிக்கப்படுகின்றது.
நாங்கள் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டோம் வெளிநாட்டவர்கள் எங்கள் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
நாங்கள் என்ன செய்திருக்கின்றோம் ? நாங்கள் காணாமல்போனவர்கள் அலுவலகத்தை அமைத்திருக்கின்றோம்.
தங்கள் அன்புக்குரியவர்களைகாணவில்லை என முறைப்பாடளித்த 6075 பேரில்( 2000 - 2009)5776 பேர் அலுவலகத்தை தொடர்புகொண்டுள்ளனர் அதாவது 96 வீதமானவர்கள் இது இலங்கை அதிகாரிகளின் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது நாங்கள் இந்த விடயத்தில் செயற்படுகின்றோம்இஅவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
நாங்கள் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்தவுள்ளோம், நாங்கள் அது குறித்து வர்த்தமானியில் அறிவித்துள்ளோம்.
நாங்கள் உள்நாட்டு பொறிமுறையை முன்வைக்கவுள்ளோம், அதன் மூலம் தீர்வை வழங்குவோம்.
நாங்கள் ஏனையவர்கள் வந்து இதற்கு தீர்வை வழங்குவதற்கு அனுமதிக்கப்போவதில்லை.
இலங்கை குறித்து தங்களின் நிலைப்பாடுகளை முன்வைப்பவர்கள் காசா குறித்த தங்களின் நிலைப்பாட்டை ஆய்வு செய்யவேண்டும்.
காசாவில் என்ன நடக்கின்றது, யார் அவர்களிற்கு இராஜதந்திர பாதுகாப்பை வழங்குகின்றார்கள்?ஆயுதங்களை வெடிமருந்துகளை வழங்குகின்றார்கள்?
கேள்வி- ஆனால் நாட்டின் வடக்குகிழக்கை சேர்ந்த மக்கள் இன்னமும் நீதிக்காக காத்திருக்கின்றார்கள்? அவர்களின் எண்ணிக்கை ஒருஇலட்சம் என தெரிவிக்கப்படுகின்றது பலவந்தமாக காணாமலாக்கப்பட்டமை குறித்து அவர்கள் குற்றம்சாட்டுகின்றார்கள்?
இதற்கு என்ன காரணம்? இந்த விடயம் குறித்து விசாரணை செய்ய ஆணைக்குழு தேவை ? நீpதியான விசாரணை தேவை?ஆனால் நீதி நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருகின்றனவே? இதற்கான காரணங்கள் என்ன?
பதில்- உங்களிற்கு எவ்வாறு இந்த எண்ணிக்கை கிடைத்தது. யார் இதனை சொன்னது?
இது வெறும் குப்பை
மேற்குலகின் முட்டாள்தனம்.
கேள்வி?
கடந்த காலங்களில் மனிதர்கள் புதைக்கப்பட்ட பாரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவே?
பதில்- ஆம் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனஈ மனித புதைகுழிகள் என்பதை அடிப்படையாக வைத்து ஒரு இலட்சம் என்ற முடிவிற்கு எப்படி வருவீர்கள்?
இதனையே நான் உங்களிற்கு தெரிவித்தேன், நாங்கள் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து ஒரு பொறிமுறையை உருவாக்கியுள்ளோம்,அந்த இலக்கங்களை நாங்கள் ஐநாவிடமிருந்தே பெற்றுக்கொண்டோம் , செஞ்சிலுவை சங்கத்தின் எண்ணிக்கை இல்லை. அவை அனைத்தின் அடிப்படையிலும்இ
2000 முதல் 2009 வரை 6407 பேர் மாத்திரமே தங்களின் அன்புக்குரியவர்கள் காணாமல்போயுள்ளனர் என முறைப்பாடு செய்துள்ளனர்.
நீங்கள் ஒரு விடயத்தை புரிந்துகொள்ளவேண்டும் இலங்கை படையினரில் 4000 பேர் காணாமல்போயுள்ளனர், அவர்கள் நடவடிக்கைகளின் போது காணாமல்போனவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது அவர்கள் மோதலின் போது கொல்லப்பட்டவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நீங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் மிகவும் அமைதியான அமைப்பு என கருதுகின்றீர்களா?
கேள்வி - நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை யுத்தத்தின் பின்னர் பல பொறிமுறைகள் உருவாக்கப்பட்டன ஏன் இலங்கையால் எதனையும் சாதிக்க முடியவில்லை என்றே நான் கேட்கின்றேன்?
பதில்-
ஒரு இலட்சம் பேர் வரை காணாமல் போயுள்ளனர்என்பது மிகவும் தவறான விடயம் 6004 பேர் மாத்திரமே காணாமல்போயுள்ளனர்.
நாங்கள் காணாமல்போனோர் அலுவலகத்தை அமைத்துள்ளோம் 97000 பேர் அந்தஅலுவலகத்திற்கு சென்றுள்ளனர் நாங்கள் அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.
ஒரே இரவில் இவ்வாறான குழப்பமான பிரச்சினைக்கு எங்களால் தீர்வை வழங்க முடியாது.
கேள்வி - ஆனால் 15 வருடங்களாகிவிட்டதே
பதில் - என்ன 15 வருடங்கள் - நீங்கள் கனடாவை கேளுங்கள்200 வருடங்களின் பின்னர் தனது சுதேசிய மக்களிடம் மன்னிப்பு கோருகின்றது.நெதர்லாந்து எங்களின் தொல்பொருட்களை 300 வருடங்களின் பின்னர்திருப்பி தந்தது.
15 வருடங்கள் என்பது நீண்டகாலமா? நாங்கள் பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளோம்.
96 வீதமான நிலத்தை திருப்பி கொடுத்துள்ளோம்?12917 பேருக்கு புனர்வாழ்வளித்துள்ளோம்இ முழு உட்கட்டமைப்பையும் உருவாக்கினோம்.
இலங்கை படையினர் 26000 பேரை இழந்தனர்ஆனால் நாங்கள் விடுதலைப்புலிகளின் 12000 உறுப்பினர்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தவில்லை.
இது அரசியல் மோதல் கைமீறிப்போய் பயங்கரவாத அமைப்பாக மாறியது.
ஏன் அவர்கள் எங்களை ஏனைய விடயங்களை செய்யுமாறு அழுத்தம் கொடுக்கின்றனர்?
கேள்வி - நீங்கள் இணைந்து வாழ்வது பற்றி பேசுகின்றீர்கள்?ஆனால் இலங்கையின் பல பகுதிகளிற்கும் சென்ற போது நான் இலங்கையின் தென்பகுதியில் மேற்கில் பல அபிவிருத்திகள் இடம்பெறுவதையும்இஆனால் வடக்குகிழக்கில் நீங்கள் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் எதனையும் பார்க்கவில்லை வேலைவாய்ப்பின்மை காணப்படுகின்றது- இரு நாடுகள் போல தோற்றமளிக்கின்றதே? நில ஆக்கிரமிப்பு குறித்த குற்றச்சாட்டுகளும் காணப்படுகின்றன -இலங்கையின் கிழக்கில் நான் பல விவசாயிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன் அவர்கள் இராணுவம் முன்னர் இராணுவத்திலிருந்து தற்போது விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு தங்கள் நிலங்கை இராணுவம வழங்கியுள்ளது என தெரிவித்தார்கள்?
சில விடயங்கள் நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளன இதனை பற்றி என்ன சொல்லவிரும்புகின்றீர்கள்?
பதில்- வடக்குகிழக்கி;ல் அபிவிருத்தி வேகமாக இடம்பெறவேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன் ஆனால் மொனராகலைக்கு சென்றாலும் இதனையே பார்ப்பீர்கள்.
இது இலாபத்துடன் தொடர்புடைய விடயம் மக்கள் இலாபம் கிடைக்குமா என்ற அடிப்படையிலேயே முதலீடு செய்வார்கள்.
கொழும்பிற்கும் வடக்குகிழக்கிற்கு இடையிலான தொலைவு காரணமாகவும்இஉள்கட்டமைப்பு வசதிகள் காரணமாகவும் மக்கள் அங்கு செல்கின்றார்கள் இல்லை.
இதன் காரணமாகவே புலம்பெயர்ந்தவர்கள் இங்கு வந்து முதலீடு செய்யவேண்டும்.
நாங்கள் மீள்சக்திதுறையில் இந்திய முதலீடு குறித்து ஆராய்ந்து வருகின்றோம் திருகோணமலை துறைமுக அபிவிருத்திஇகாங்கேசன்துறை அபிவிருத்தி இந்தியாவையும் இலங்கையையும் இணைப்பது குறித்தும் ஆராய்கின்றோம். இதன் காரணமாக மக்களின் நடமாட்டங்களை அதிகரித்து அப்பகுதியில் வாழ்க்கை தரத்தை அதிகரிக்கலாம்.
நீஙகள் உங்கள் பயணத்தின் போது வீதிகள் சிறந்த நிலையில் இருப்பதை அவதானித்திருப்பீர்கள்.பொதுகட்டமைப்பு உள்ளது அரசாங்கத்தினால் அதனை மாத்திரம் செய்ய முடியும்.
நாங்கள் அனைத்தையும் செய்துள்ளோம் அரசாங்க உட்கட்டமைப்புகள் சிறப்பாக உள்ளன சிறந்த வீதிகள் உள்ளனமிக நவீன மருத்துவமனைகள் உள்ளன நாங்கள் பெரும் பணத்தை செலவழித்துள்ளோம்கிளிநொச்சி காங்கேசன்துறையில் மிகச்சிறந்த மருத்துவமனைகளை உருவாக்கிவருகின்றோம்.
பாடசாலைகளை உருவாக்குகின்றோம் இணைய தொடர்புள்ளது அரசாங்கத்தினால் இதனை மாத்திரம் செய்ய முடியும்.
இதற்கு அப்பால் தனியார் துறையே பொறுப்பு அவர்கள் வர்த்தகரீதியில் இது சாத்தியமான விடயமா என்ற அடிப்படையிலேயே பார்ப்பார்கள்இதன் காரணமாக உலகின் சில நாடுகளில் சிறந்த நிலையில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் தொடர்ந்தும் தனிநாட்டிற்காக குரல்கொடுப்பதற்கு பதில்இலங்கை மக்களில் ஒரு பகுதியினரை தவறாக வழிநடத்தி மோதலில் ஈடுபடுத்துவதற்கு பதில்இலங்கைக்கு திரும்பி வாருங்கள் இந்த உட்கட்டமைப்பை பாருங்கள்திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்வேலைவாய்ப்பினை உருவாக்குங்கள்மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துங்கள்
கேள்வி- டிடபில்யூ இந்த வருடம் விவரணச்சித்திரமொன்றை வெளியிட்டிருந்தது- அதில் சித்திரவதைகளில் ஈடுபட்ட இலங்கையின் உயர் இராணுவ அதிகாரிகள் குறித்தும் அவர்கள் ஐநா அமைதிப்படையில் இணைந்து பணியாற்றியமை குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.ஐநா இது பற்றி ஏதாவது குறிப்பிட்டிருந்ததா?
பதில்- உலகில் மிகவும் மதிக்கப்படும் படையணிகளில் இலங்கை இராணுவத்தினரும் உள்ளனர்
யுத்தத்தின் இறுதியில் விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக பொதுமக்களை பயன்படுத்தியவேளைஇநாங்கள் விடுதலைப்புலிகளை தோற்கடித்தவேளை பொதுமக்கள்இராணுவத்தினரிடமிருந்து தப்பியோடவில்லை படையினரை நோக்கியே ஓடினார்கள்
பாதுகாப்பு என்பது இலங்கை படையினரின் கரங்களிலேயே கிடைக்கும் என்பது அவர்களிற்கு தெரியும்.
தமிழில் - ரஜீபன்